மீண்டும் உருவாகிறது பிரமாண்ட கூட்டணி,”தளபதி65″ அப்டேட் இதோ..

0

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.லோகேஷ் கனகராஜ் மாநகரம்,கைதி முதலிய வெற்றி படங்களை தந்ததால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தளபதி விஜய்யின் 65வது படத்தின் இயக்குநர் யார் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.ஆனால் தளபதியின் நட்பு வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யை வைத்து இதற்கு முன்பே வெற்றி படத்தை குடுத்த மோகன் ராஜா தான் தளபதியின் 65வது படத்தை இயக்க உள்ளாராம்.ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தனி ஒருவன் பாணியில் ஒரு கதையை விஜய்யிடம் கூறியிருந்தார்.75% மோகன் ராஜா தான் தளபதி65 இயக்குநர் என்றும் கூறப்படுகிறது.இளம் இசையமைப்பாளர் ஹிப்.ஹாப்.தமிழா இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here