“தளபதி65″க்காக கடும் போட்டி,அட்லியுடன் நான்காவது முறையாக இணையும் விஜய்

0

தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.மேலும் தளபதி64 படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மாநகரம்,கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் தான் இப்படத்தை இயக்குகிறார்.

பொதுவாகவே தளபதியின் படபிடிப்பு நடந்து வரும் சமயத்தில் அடுத்த படத்தின் அப்டேட்டும் வந்துவிடும்.இந்த வகையில் தளபதி65 படத்தை பற்றிய மிக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அருண்விஜய்யை வைத்து தடையறத் தாக்க,தடம் உள்ளிட்ட வெற்றிபடங்களை தந்த மகிழ் திருமேனி தான் தளபதி65 படத்தை இயக்க இருக்கிறாராம்.2வருடங்களுக்கு முன்பே ஆக்ஷன் கதை என்றை தளபதியிடம் கூறியிருந்தாராம்.அந்த கதையும் தளபதிக்கு பிடித்து போய்விட்டதாம்.

மேலும் தளபதியிடம் லவ் ஸ்டோரியை கூறி கால்சீட்டிற்காக காத்திருக்கும் அட்லிக்கு தளபதி65 படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரிய கேள்வி தான்.தளபதி65 படத்தை பற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று நம்பபடுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here