மாஸ்டர் படம் இந்த சாதனையை முறியடிக்குமா ?? விஜய்யின் இந்த அதிஷ்டம் கை குடுக்குமா ?

0

தளபதியின் சினிமா வரலாற்றில் ஆரம்பகாலக்கட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக சில படங்கள் மோசமான தோல்வியை தழுவியது.பல விமர்சனங்களும், கேலி கிண்டல்களையும் சந்தித்தார் விஜய்.

1996ம் ஆண்டு விக்ரமன் இயக்கி விஜய்,சங்கீதா நடித்த “பூவே உனக்காக” திரைப்படம் தளபதிக்கு நல்ல வெற்றியை தேடி தந்தது.இந்த படத்தின் மூலமாக குடும்பங்களில் ஜொலிக்க தொடங்கினார் விஜய்.8வருடங்களுக்கு பிறகு இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய்,த்ரிஷா நடித்த கில்லி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் எப்.எம் முதல் தொலைக்காட்சி வரை நல்ல வரவேற்பை பெற்றது.நல்ல மாஸ் நடிகராக வளர்ந்து வந்த விஜய்க்கு கில்லி நல்ல வெற்றி படமாக அமைந்தது.50கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது.

அதன் பிறகு 8வருடங்களுக்கு பிறகு வெளிவந்த “துப்பாக்கி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தார் விஜய்.வெளியான 12தினங்களில் 100கோடி வசூல் செய்யப்பட்டு தயாரிப்பாளர்,விநியோகிஸ்தர் அனைவரின் செல்லபிள்ளையாக வலம் வரத்துவங்கினார் விஜய்.

துப்பாக்கி படத்திற்கு பிறகு 8வருடம் கழித்து வர இருக்கும் படம் ‘மாஸ்டர்’.படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு முன்னதாகவே அறிவித்து இருந்தனர்.தளபதியின் 8வருட ராசி இந்த படத்திலும் தொடருமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here