2021 பொங்கலுக்கு வெளியாக இருக்கும் 3 படங்கள் ! 6 வருடங்களுக்கு பின் மோதும் விஜய்,அஜித் படங்கள்

0

கொரோனா தாக்கத்தால் சினிமா துறை சார்ந்த பல கலைஞர்கள் வேலையில்லாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சினிமா படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தி வைக்கபட்டுள்ள நிலையில் சீரியல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கபட்டது.

தியேட்டர்கள் மீண்டும் திறக்கபடும் போது பெரிய நடிகர்களின் படங்கள் தான் முதலில் வெளியாகும் என்று தியேட்டர் அதிபர்கள் கூறியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்டர் படம் கொரோனா பரவலால் OTT ல் வெளியாகும் என்று தகவல் பரவியது.ஆனால் அந்த தகவல் வதந்தி என்று படத்தின் தயாரிப்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் இருந்து படப்பிடிப்புகளை ஆரம்பிக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில பாகங்களே எஞ்சி இருக்கிறதாம்.படத்தின் மற்ற வேலைகளை டிசம்பர் மாத இறுதியில் முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் தேதியை லாக் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படமும் பொங்கல் வெளியாகும் என்று அறிவிப்பு வந்துள்ளது.2021 பொங்கலுக்கு மூன்று பெரிய நடிகர்களின் படம் வர அதிக வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் வட்டாரத்தில் குஷியாக உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here