“தம்பி நீ வேற லெவல்”,பிகில் படத்தை பார்த்து தயாரிப்பாளரின் ஒரே வார்த்தை-கோடிகளில் வியாபாரம்

0

தளபதி நடிப்பில் தீபாவளி அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கும் படம் ‘பிகில்’.அட்லி இயக்கிய இப்படத்தை ஏ.ஜே.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.சென்னையில் அதிக விலைக்கு விநியோகிஸ்தர்கள் வாங்கியுள்ளனர்.படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

தற்போது படத்தின் தயாரிப்பாளர் கல்பாதி அகோரம் பிகில் படத்தை பார்த்து அவரது கருத்தை கூறியுள்ளார்.அவர் கூறியது,

“விஜய் போன்ற மாஸ் நடிகர்களை வைத்து படம் எடுப்பது எளிதான விஷயம் இல்லை.ஆரம்பம் முதல் கடைசி வரை தயாரிப்பு தரப்பில் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளோம்.இயக்குநர் அட்லி மீது இருந்த நம்பிக்கை,படத்தை பார்த்த பிறகு மேலும் அதிகரித்துள்ளது.ஒரு மாஸ் நடிகரை வைத்து சமூக கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.இப்படம் எங்களது தயாரிப்பில் வெளிவர இருக்கிறது என்பது எங்களுக்கு பெருமை,படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்”என்று கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here