“பிகில்”படத்துடன் போட்டிக்கு வந்த கைதி’யின் மோசமான நிலை,புலம்பி தள்ளும் தியேட்டர் நிர்வாகிகள்

0

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி ‘AGS ENTERTAINMENT’ நிறுவனம் தயாரித்து வருகிற 25ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘பிகில்’.அதே நாளில் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ‘DREAM WARRIOR’ நிறுவனம் தயாரித்த ‘கைதி’படமும் வெளியாக உள்ளது.

பொதுவாகவே விஜய் பட ரிலீஸ் என்றாலே களத்தில் மற்ற எந்த படமும் வராது.அப்படி மற்ற படங்கள் திரைக்கு வரும் பட்சத்தில் போதிய தியேட்டர் கிடைக்காமல் பந்தய களத்தில் இருந்து ஓடிவிடும்.ஆனால் கைதி படம் 25ம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.இதற்கு பலர் ஆதரவு அளித்தனர்.

ஆனால் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்ததில் இருந்து கைதி படம் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.பெரும்பாலான தியேட்டர்களில் பிகில் படத்தையே திரையிடுகின்றனர்.சென்னையில் படத்தை வாங்கிய தியேட்டர்களில் ஒரு காட்சி கூட ஹவுஸ்புல் ஆகவில்லை என்று புலம்பி தள்ளுகின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here