பிகில் படத்தின் பிரமாண்ட சாதனை,300கோடிகளை வசூல் செய்து ரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய்

0

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் கடந்த மாதம் 25ம் தேதி வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை செய்து வருகிறது.

விளையாட்டு துறையில் பெண்களின் பங்கும் இருக்க வேண்டும் என்ற கருத்து படத்தின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது.நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்&நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்தது படத்திற்கு இன்னொரு பலம்.

வசூல் ரீதியாக படம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு பல மடங்கு இலாபத்தை ஈட்டி இருப்பதாகவும் கூறுகின்றனர்.வெளியான இரண்டு நாட்களில் 100கோடிகளும்,5வது நாளில் 200கோடியையும் எட்டியது.

தற்போது படத்தின் ஒட்டுமொத்த வசூல் இன்னும் இரு தினங்களில் 300கோடிகளை தொடலாம் என்றும் கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here