டிவிட்டரில் டிரண்டிங்கில் பிகில் 100வது நாள் கொண்டாட்டம், பிகில் செய்த சாதனைகள் என்னென்ன ???

0

தளபதி விஜய் நடித்து கடந்த ஆண்டு அக்டோபர் 25 அன்று வெளியான திரைப்படம் பிகில்.படத்தில் கால்பந்தாட்ட வீரராக கலக்கிய விஜய்க்கு பிகில் திரைப்படம் மாஸான வெற்றி படமாக அமைந்தது.

விஜய்யின் வரலாற்றில் அதிக வசூல் செய்யபட்ட படம் பிகில்.உலக அளவில் 300கோடிக்கு மேல் வசூல் செய்தது.தயாரிப்பாளருக்கும் நல்ல இலாபத்தை ஈட்டி தந்தது.

மூன்று மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை கலக்கியது.2018ம் வருடம் நவம்பர் வெளியான சூப்பர்ஸ்டாரின் 2.0 திரைப்படம் 15மொழிகளில் வெளியாகியது.ஆனால் விஜய்யின் பிகில் மூன்று மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை கலக்கியது.

மேலும் பிகில் படம் சமூக வலைதளத்தில் பல சாதனைகளை செய்திருந்தது.டிவிட்டரில் அதிகம் மென்சன் செய்யபட்ட படம் என்ற பெருமையும் பிகில் படத்திற்கே போய் சேரும்.அதிக லைக் செய்யபட்ட இந்திய திரைப்படத்தின் டிரைலர் என்ற பெயரையும் பிகில் தன்வசம் தக்கவைத்துள்ளது.2.3மில்லியன் லைக்குகளும்,49மில்லிமன் பார்வையார்களையும் பெற்று அனைவரையும் பிரமிப்படைய செய்திருந்தது பிகில்.

நூறாவது நாள் கொண்டாட்டத்தை தளபதி ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.டிவிட்டரில் #IndustryHitBIGIL100Days என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் 4வது இடத்தில் டிரண்ட் ஆகி வருகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here