“கண்கலங்கிய அர்ச்சனா கல்பாதி”,மன்னிப்பு கேட்கும் விஜய் ரசிகர்கள்

0

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் ஒன்று ‘ஏ.ஜே.எஸ் என்டர்டெயின்மென்ட்’.2006ல் ஆரம்பிக்கபட்ட இந்த தயாரிப்பு நிறுவனம் பல வெற்றிபடங்களை அளித்துள்ளது.

அனேகன்,தனிஒருவன்,சந்தோஷ் சுப்பிரமணியம்,எங்கேயும் காதல் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளது.தற்போது இந்நிறுவனம் தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படத்தை தயாரித்துள்ளது.தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் பட்ஜெட் 180கோடி.

பொதுவாக தளபதி படம் என்றாலே அடிக்கடி அப்படத்தை பற்றிய தகவல்கள் இணையத்தில் அதிகமாக பேசப்படும்.ஆனால் பிகில் படத்தை பற்றிய எந்த ஒரு தகவலையும் தயாரிப்பாளர் வெளியிடாமல் மௌனம் காத்திருந்தார்.இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை திட்டி வருகின்றனர்.

இதற்கு சினிமா விமர்சகர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஒரு படத்தை தயாரிப்பது மிகவும் கடினமான விஷயம்.படத்தின் டீசர்/டிரைலரை எப்போது வெளியிட வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.அதற்காக ரசிகர்கள் இப்படி திட்டகூடாது எனவும் கூறியுள்ளார்.

இன்று மாலை பிகில் படத்தின் டீசர் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here